/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் கட்டுமான திட்டங்கள்: 'கிரெடாய்' தேசிய குழு ஆர்வம்
/
சென்னையில் கட்டுமான திட்டங்கள்: 'கிரெடாய்' தேசிய குழு ஆர்வம்
சென்னையில் கட்டுமான திட்டங்கள்: 'கிரெடாய்' தேசிய குழு ஆர்வம்
சென்னையில் கட்டுமான திட்டங்கள்: 'கிரெடாய்' தேசிய குழு ஆர்வம்
ADDED : ஆக 01, 2024 12:34 AM
சென்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு கட்டுமான திட்டங்களை பார்வையிட, கிரெடாய் அமைப்பின் தேசிய பிரிவு உறுப்பினர்கள் 80 பேர் அடங்கிய குழு வந்துள்ளது.
இது தொடர்பாக, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் சென்னை பிரிவு செயலர் அஸ்லாம் பக்கீர் முகமது கூறியதாவது:
கிரெடாய் தேசிய பிரிவை சேர்ந்த 80 உறுப்பினர்கள் அடங்கிய குழு, சென்னைக்கு வந்துள்ளது. இவர்கள், சென்னையில் போரூர், மாதவரம், பழைய மாமல்லபுரம் சாலை, ராஜா அண்ணாமலை புரம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை பார்வையிட்டனர்.
மெட்ரோ ரயில் வழித்தடங்களில் 6.5 மடங்காக கட்டட தள பரப்பு குறியீட்டை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது குறித்து விபரங்களை கேட்டறிந்தனர். சென்னையில் அதிகபட்ச விலையில் மேற்கொள்ளப்படும் ஆடரம்பர குடியிருப்புகள், மிக குறைந்த விலையில் மேற்கொள்ளப்படும் குடியிருப்பு திட்டங்கள் குறித்து இந்த குழுவினர் விசாரித்தனர்.
சென்னையில் ரியல் எஸ்டேட் துறை வளர்ந்து வரும் விதம், இங்குள்ள வாய்ப்புகள் குறித்தும் தேசிய பிரிவு உறுப்பினர்கள் கேட்டறிந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.