/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்வாயில் தேங்கும் குப்பை கழிவு நீரோட்டம் பாதிப்பால் சீர்கேடு
/
கால்வாயில் தேங்கும் குப்பை கழிவு நீரோட்டம் பாதிப்பால் சீர்கேடு
கால்வாயில் தேங்கும் குப்பை கழிவு நீரோட்டம் பாதிப்பால் சீர்கேடு
கால்வாயில் தேங்கும் குப்பை கழிவு நீரோட்டம் பாதிப்பால் சீர்கேடு
ADDED : ஏப் 15, 2024 01:15 AM

அரும்பாக்கம்:அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட 107வது வார்டில், அரும்பாக்கம் அருகில், சூளைமேடு பாரி தெருவில் விருகம்பாக்கம் கால்வாய் செல்கிறது. நெற்குன்றத்தில் துவங்கும் இக்கால்வாய் அரும்பாக்கம், சூளைமேடு வழியாக, அமைந்தகரை கூவத்தில் கலக்கிறது.
முறையான பராமரிப்பு இல்லாததால் கால்வாய் முழுதும், மதுபாட்டில்கள், 'பிளாஸ்டிக்' கழிவுகள் நிறைந்து காணப்படுகின்றன.
குறிப்பாக பாரி தெருவில் உள்ள தரைப் பாலத்தில் குப்பை தேங்குவது வாடிக்கையாகி விட்டது.
இதனால், நீரோட்டம் தடைபட்டு, கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுள்ளது. கொசு தொல்லை அதிகரித்து, மர்ம காய்ச்சல் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக, பாரி தெரு, கண்ணகி தெரு குடியிருப்போர் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து பகுதி மக்கள் கூறியதாவது:
மாநகராட்சியின் அலட்சியத்ததால், விருகம்பாக்கம் கால்வாயில் தொடர்ந்து, சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அவ்வப்போது, பாரி தெரு தரைப்பாலத்தில் குப்பை கழிவுகள் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொகையும் அதிகமாக உள்ளது.
இதேபோல், குடியிருப்போர் பல பிரச்னைகளை சந்திக்கிறோம்.
குப்பை கழிவுகளை விரைந்து அகற்றி, சுகாதார பாதிப்பை தடுத்து நிரந்தர தீர்வு கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

