/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழல், பாடியநல்லுார், சோழவரத்தில் தொடர் மின் தடை நள்ளிரவில் மக்கள் மறியல்
/
புழல், பாடியநல்லுார், சோழவரத்தில் தொடர் மின் தடை நள்ளிரவில் மக்கள் மறியல்
புழல், பாடியநல்லுார், சோழவரத்தில் தொடர் மின் தடை நள்ளிரவில் மக்கள் மறியல்
புழல், பாடியநல்லுார், சோழவரத்தில் தொடர் மின் தடை நள்ளிரவில் மக்கள் மறியல்
ADDED : ஆக 29, 2024 12:41 AM

புழல், ஆபுழல், பாடியநல்லுார், புள்ளிலைன், நாரவாரிகுப்பம் சுற்றுவட்டார பகுதியில், நேற்று முன்தினம் இரவு மின் தடை ஏற்பட்டது. பல மணி நேரம் மின் தடை நீடித்ததால், மின்வாரியத்தில் புகார் அளித்தனர். ஆனால், உரிய பதில் கிடைக்கவில்லை.
இதை கண்டித்து, சென்னை -- கோல்கட்டா நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு பகுதிவாசிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
செங்குன்றம் போலீசார் மற்றும் மின் வாரிய அதிகாரிகளின் பேச்சை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால், ஜி.என்.டி., சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேபோல, செங்குன்றத்தில் காந்தி நகர், முத்துமாரியம்மன் கோவில் தெரு, கலைஞர் கருணாநிதி தெரு, பெரியார் தெரு ஆகிய தெருக்களில் உள்ள வீடுகளில், நேற்று காலை முதலே குறைந்த மின் அழுத்த பிரச்னை நீடித்தது.
இதை கண்டித்து, நேற்று மதியம் 1:00 மணியளவில், திருவள்ளூர் -- செங்குன்றம் நெடுஞ்சாலையில் பகுதிவாசிகள் மறியலில் ஈடுபட்டனர். பின், அதிகாரிகளின் சமரச பேச்சிற்கு பின் கலைந்து சென்றனர்.
பகுதி மக்கள் கூறியதாவது:
செங்குன்றம், பாடியநல்லுார், புள்ளிலைன், நாரவாரிகுப்பம் சுற்றுவட்டார பகுதியில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் நுகர்வோர் உள்ளனர்.
எங்கள் பகுதியில் துணை மின் நிலையம் இல்லை. புழல், சோத்துபெரும்பேடு, அலமாதி உள்ளிட்ட பகுதி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. தவிர, மின்வாரிய கேபிள் மற்றும் மின்மாற்றிகளின் பராமரிப்பும் படுமோசமாக உள்ளது.
இரவு நேரங்களில் மின் நுகர்வு அதிகரிக்கும்போது, மின் தடை அல்லது குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படுகிறது. இது, பல மாதங்களாகவே தொடர்கதையாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

