ADDED : மார் 04, 2025 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாடி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் பணியாற்றும் போலீசாரின் நலனை கருத்தில் வைத்து, கோடை வெயிலின் போது அவர்களுக்கு நீர் மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாடி அருகே நடந்த இதற்கான முதல் நிகழ்ச்சியை, போலீஸ் கமிஷனர் சங்கர் நேற்று துவக்கி வைத்தார். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வரும் ஜூன் மாதம் வரை, நான்கு மாதங்களுக்கு போலீசாருக்கு நீர் மோர் வழங்கப்பட உள்ளது.
மேலும், கோடை காலத்தில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 'கூலிங் ஹெல்மெட்' மற்றும் கூலிங் கிளாஸ்' ஆகியவை வழங்கப்பட்டன.