/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூந்தமல்லி நீதிமன்றத்தில் கைகலப்பு போலீஸ் - வக்கீல் 'டிஷ்யூம், டிஷ்யூம்'
/
பூந்தமல்லி நீதிமன்றத்தில் கைகலப்பு போலீஸ் - வக்கீல் 'டிஷ்யூம், டிஷ்யூம்'
பூந்தமல்லி நீதிமன்றத்தில் கைகலப்பு போலீஸ் - வக்கீல் 'டிஷ்யூம், டிஷ்யூம்'
பூந்தமல்லி நீதிமன்றத்தில் கைகலப்பு போலீஸ் - வக்கீல் 'டிஷ்யூம், டிஷ்யூம்'
ADDED : ஆக 22, 2024 12:48 AM
பூந்தமல்லி, பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் யோகபாலன்; வழக்கறிஞர். நசரத்பேட்டையில் நடந்த அடிதடி சம்பவம் தொடர்பாக, இவர் மீது நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், முன்ஜாமின் பெற்றுள்ளார்.
இவ்வழக்கு சம்பந்தமாக நேற்று, பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1ல், மாஜிஸ்திரேட் அமுதா முன் ஆஜராகி, யோகபாலன் வெளியே வந்தார்.
அப்போது, நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்த வளசரவாக்கம் போலீஸ்காரர் பிரபாகரன் என்பவருக்கும், யோகபாலனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ்காரரை, யோகபாலன் திடீரென தாக்கியுள்ளார்.
பதிலுக்கு அவரும், எதிர் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது. அங்கிருந்த வழக்கறிஞர்கள், இருவரையும் சமாதானப்படுத்தினர்.
இவர்கள் அடிதடி குறித்து அறிந்த மாஜிஸ்திரேட் அமுதா, முறையாக விசாரிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீஸ்காரர் பிரபாகரன் புகாரின்படி, பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வளசரவாக்கத்தில் நடந்த ஒரு குற்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு, ஜாமின் கேட்டு யோகபாலன் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இதற்கு, வளசரவாக்கம் போலீசார் ஆட்சேபனை தெரிவித்ததாகவும், இதன் காரணமாக வளசரவாக்கம் போலீஸ்காரர் பிரபாகரனை, யோகபாலன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.