/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி பணியாளர்கள் கால்பந்து அலுவலர் சங்கம் 'ஏ' அணி முதலிடம்
/
மாநகராட்சி பணியாளர்கள் கால்பந்து அலுவலர் சங்கம் 'ஏ' அணி முதலிடம்
மாநகராட்சி பணியாளர்கள் கால்பந்து அலுவலர் சங்கம் 'ஏ' அணி முதலிடம்
மாநகராட்சி பணியாளர்கள் கால்பந்து அலுவலர் சங்கம் 'ஏ' அணி முதலிடம்
ADDED : மார் 15, 2025 12:45 AM

சென்னை,
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கான விளையாட்டு போட்டிகள், நகரில் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன.
போட்டியில், 74 கவுன்சிலர்கள் உட்பட மொத்தம் 2,416 பேர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர். நேற்று முன்தினம், ஆண்களுகான கால்பந்து போட்டி, சென்ட்ரல் அருகில் உள்ள கண்ணப்பர் திடலில் நடந்தது.
ஒன்பது அணிகள் பங்கேற்ற போட்டியின் முடிவில், சென்னை மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் 'ஏ' அணி முதலிடத்தையும், பொது சுகாதார துறை அணி இரண்டாமிடத்தையும் கைப்பற்றின.
நேற்று காலை, கண்ணப்பர் திடலில் பெண்களுக்கான எறிபந்து, கோ - கோ, டென்னிகாய்ட் ஆகிய போட்டிகள் தனித்தனியாக நடந்தன.
எறிபந்தில் எட்டு அணிகள், கோ - கோவில் 12 அணிகள், டென்னிகாய்ட் போட்டியில், 50 அணிகள் பங்கேற்றுள்ளன.
அனைத்து போட்டிகளிலும், ஆறு கவுன்சிலர்கள் உட்பட மொத்தம் 346 வீராங்கனையர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.