/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி எச்சரிக்கை அலட்சியம் சாலையில் மீண்டும் உலாவும் மாடுகள்
/
மாநகராட்சி எச்சரிக்கை அலட்சியம் சாலையில் மீண்டும் உலாவும் மாடுகள்
மாநகராட்சி எச்சரிக்கை அலட்சியம் சாலையில் மீண்டும் உலாவும் மாடுகள்
மாநகராட்சி எச்சரிக்கை அலட்சியம் சாலையில் மீண்டும் உலாவும் மாடுகள்
ADDED : மே 08, 2024 12:20 AM

சென்னை மாநகராட்சியின் ஆலந்துார், பெருங்குடி மண்டல எல்லைக்கு உட்பட்ட ஆலந்துார், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லுார், உள்ளகரம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் உள்ளனர். நுாற்றுக்கணக்கான மாடுகள் வளர்க்கப்படுகின்றன.
போக்குவரத்துக்கு இடையூறாக, பிரதான சாலை உள்ளிட்ட பல இடங்களில் மாடுகள் சுற்றித் திரிவதாக ஏராளமான புகார்கள் சென்றன. ஆனால், மாநகராட்சி கண்டுகொள்ளவில்லை.
நங்கநல்லுார் பகுதியில் மாடு முட்டி இரு பெண்கள் படுகாயமடைந்தனர். பழவந்தாங்கலைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மாடு முட்டி வயிறு கிழிந்து சிகிச்சை பெற்றார்.
கடந்த ஜன., மாதம் நங்கநல்லுார், எஸ்.பி.ஐ., காலனி பிரதான சாலையைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர், மாடு முட்டி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து, விழித்துக்கொண்ட மாநகராட்சி,மாடுகளை சாலையில் திரியவிட்டால் முதல் முறை, 5,000, இரண்டாம் முறை, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து சில நாட்கள் நடவடிக்கை எடுத்தது.
பின், வழக்கம்போல கண்கொள்ளாமல் விட்டதால், இரண்டு மண்டலங்களிலும் மாடுகள், சாலையில் உலா வந்து, தஞ்சமடைகின்றன.
அவற்றால் மீண்டும் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
- நமது நிருபர் -

