/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் மீது ஊழல் புகார் தெரிவித்த கவுன்சிலர்கள்
/
கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் மீது ஊழல் புகார் தெரிவித்த கவுன்சிலர்கள்
கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் மீது ஊழல் புகார் தெரிவித்த கவுன்சிலர்கள்
கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் மீது ஊழல் புகார் தெரிவித்த கவுன்சிலர்கள்
ADDED : ஜூலை 20, 2024 01:39 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சியில், 30 வார்டுகள் உள்ளன. அதில், 22 தி.மு.க.,எட்டு அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் உள்ளனர்.
நகராட்சி கவுன்சிலர்கள் சிறப்பு கூட்டம், நேற்று காலை 11:00 மணிக்கு நடந்தது. நகராட்சி தலைவர் தி.மு.க.,வின் கார்த்திக், நகராட்சி கமிஷனர் தாமோதரன் ஆகியோர் தலைமையேற்றனர்.
கூட்டம் துவங்கியதும், துர்கா பிரசாத் தலைமையிலான அ.தி.மு.க., கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர் கார்த்திக் மீது, திட்டப் பணிகளில் நடந்துள்ள முறைகேடு மற்றும் ஊழல் குறித்து புகார் தெரிவித்தனர்.
அதற்கு, நகராட்சி தலைவர் கார்த்திக் முறையான விளக்கம் அளிக்காததால், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும், கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
அ.தி.மு.க., கவுன்சிலர்துர்கா பிரசாத் கூறியதாவது:
நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளில், தொடர்ச்சியாக முறைகேடுகள் நடந்து வருகின்றன. 'டெண்டர்' பணிகளில் வெளிப்படைத் தன்மை இல்லை. அதுபற்றி, நகராட்சி தலைவரிடம் கேட்டால், முறையாக பதில் அளிப்பதில்லை.
மேலும், நகராட்சிக்கு உட்பட்ட அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகளில், அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை சீரமைப்பு, குப்பை அகற்றம் என, எந்தப் பணியும் செய்வதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நகராட்சி தலைவர் கார்த்திக் கூறியதாவது:
நகராட்சியில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும், நகராட்சி மண்டல இயக்குனரின் வழிகாட்டுதலின்படி, முறையாக செய்யப்பட்டு வருகின்றன. ஊராட்சியில்தான் தலைவர் கையொப்பமிட்டு பணம் பெறமுடியும். நகராட்சியில் அவ்வாறு முடியாது.
அனைத்து டெண்டர்களும், முறையாக ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும், ஆதாரங்கள் அற்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி உடையவை.
இவ்வாறு அவர் கூறினார்.