தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்


ADDED : ஜூலை 03, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விபத்தில் மாற்றுத்திறனாளி பலி

நந்தம்பாக்கம்: நந்தம்பாக்கம், 6வது தெருவைச் சேர்ந்தவர் சதிஷ்குமார், 36; கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. நேற்று முன்தினம் நள்ளிரவு, ‘யமஹா ஆர்15’ பைக்கில், வர்த்தக மையம் பின்புறம் கணபதி காலனி, 30 அடி சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். 

வேகத்தடையை கவனிக்காமல் சென்றதில், துாக்கி வீசப்பட்ட சதிஷ்குமார், பக்கவாட்டில் இருந்த சுவற்றில் மோதி தலையில் காயமடைந்தார். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று மதியம் இறந்தார்.

**

பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை

ஆலந்துார்: பரங்கிமலை காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து இரு குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறார்.

வினோத்குமார், 35, என்பவர், அப்பெண்ணிடம் பழகிவந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன், குழந்தைகளை கொன்று விடுவதாக அவரை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பரங்கிமலை மகளிர் போலீசார், வினோத்குமாரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர். 

**

பைக் திருடி விற்ற வாலிபர் சிக்கினார்

மாதவரம்: மாதவரம், பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார், 45, என்பவரது ‘யமஹா’ ஸ்கூட்டரை திருடிய சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த விஜய், 22, என்பவரை, மாதவரம் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அஜித் என்பவருடன் சேர்ந்து, மது போதையில் இருசக்கர வாகனங்களை திருடி விற்று வந்தது தெரியவந்தது. மூன்று இருசக்கர வாகனங்களை மீட்ட போலீசார், அஜித்தை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us