ADDED : ஜூலை 10, 2026 08:30 PM
அ நிறம் | அளவு
திருடனை விரட்டிப்பிடித்த ஆயுதப்படை காவலர்
–
அபிராமபுரம்: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த போலோ பஸ்வான், 25, சென்னை ஆர்.ஏ.புரம், 2வது பிரதான சாலையில் நண்பருடன், கடந்த 8ல் சைக்கிளில் சென்றார்.
இருவர் வழிமறித்து கத்திமுனையில் மொபைல் போனை பறித்து, ஆட்டோவில் தப்பினர். இதை பார்த்த ஆயுதப்படை காவலர் புவனேஷ் பிரபு, 29, விடாமல் விரட்டிச் சென்று வழிப்பறியில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை பிடித்து, அபிராமபுரம் போலீசில் ஒப்படைத்தார்.
பிடிபட்டவர், பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த், 30, என்பதும் தப்பியவர் 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. ஆனந்த் கைது செய்யப்பட்டு, தப்பி சிறுவனை போலீசார் தேடுகின்றனர்.
