ADDED : ஜூலை 10, 2026 08:43 PM
அ நிறம் | அளவு
எலக்ட்ரீசியனை தாக்கிய 10 பேர் கைது
மதுரவாயல்: மதுரவாயல், சீமாத்தம்மன் நகரைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் மணிகண்டன், 28, அதே பகுதி கிரண், 22, இடையே முன்விரோதம் உள்ளது.
கடந்த 8ம் தேதி ஏற்பட்ட தகராறில், கிரண், அவரது நண்பர்கள் கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் மணிகண்டனை தாக்கினர்.
பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் உள்ளார். மதுரவாயல் போலீசார் விசாரித்து, கிரண், சந்தோஷ், ஜானகிராமன், 19, உட்பட 10 பேரை கைது செய்தனர்.
