ADDED : ஜூலை 22, 2026 03:51 PM
பாலியல் தொழில்: 2 பெண்கள் கைது
கே.கே.நகர்: கே.கே.நகர் மேற்கு, பஜார் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த கலையரசி, 44 மற்றும் வடபழனி திரு.வி.க., நகரைச் சேர்ந்த ஜெயந்தி, 43 ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண்ணை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
****
தேடப்பட்ட வழிப்பறி திருடன் சிக்கினான்
கோயம்பேடு: கடந்த 2022ம் ஆண்டு, கோயம்பேடில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் வளசரவாக்கம், ராதா அவென்யூவைச் சஞ்சய், 20 என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த அவர் தலைமறைவானார். கடந்த 16ம் தேதி, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததை அடுத்து, போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
***
பைக் திருடிய ஆட்டோ ஓட்டுநர் கைது
கொளத்துார்: கொளத்துார், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் இமானுவேல், 35. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது ‘யமஹா’ பைக், நேற்று முன்தினம் இரவு திருட்டு போனது. ராஜமங்கலம் போலீசாரின் விசாரணையில், வில்லிவாக்கம் வடக்கு செங்குன்றம் சாலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான தமிழரசன், 20 திருடியது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
