ADDED : ஜூலை 22, 2026 03:51 PM
அ நிறம் | அளவு
பாரிமுனை: ஆணவக் கொலையை கண்டித்து, தமிழ் புலிகள் கட்சி சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ் புலிகள் கட்சி சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் தலைவர் திருவள்ளுவன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் நடக்கும் ஜாதி ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக, சட்டசபையில் தனி சட்டம் கொண்டுவர வேண்டும்.
ஐந்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும், துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட கோரிக்கையை வலியுறுத்தி, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கோஷங்கள் எழுப்பினர்.
