ADDED : ஜூலை 24, 2026 03:52 PM
அ நிறம் | அளவு
துணிக்கடையில் பெண்ணிடம் பணம் திருட்டு
குரோம்பேட்டை: பெருங்குடியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ஆண்டனி ராஜி, 41. நேற்று முன்தினம், குடும்பத்தினருடன் குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடைக்கு பொருட்களை வாங்க சென்றார்.
முதல் மாடியில் புடவை பார்த்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மூன்று பெண்கள், ஜேம்ஸ் ஆண்டனி ராஜி தாயின் கவனத்தை திசை திருப்பி, அவர் பையில் வைத்திருந்த, 50,000 ரூபாயை திருடிச் சென்றனர். குரோம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றன
