/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முன்பகையால் ஆத்திரம் சுமை துாக்குபவருக்கு வெட்டு
/
முன்பகையால் ஆத்திரம் சுமை துாக்குபவருக்கு வெட்டு
ADDED : செப் 03, 2024 12:43 AM

கண்ணகி நகர், கண்ணகி நகரைச் சேர்ந்தவர் யுவராஜ், 40; சுமை துாக்கி. இவருக்கும், கண்ணகி நகர், எழில் நகரைச் சேர்ந்த ராஜேஷ், 29, என்பவருக்கும் முன்பகை இருந்துள்ளது. இதனால், யுவராஜை கொலை செய்ய காத்திருந்தார்.
இந்நிலையில், ராஜேஷ் மற்றும் நண்பர்களான சதீஷ், 26, அந்தோணி, 27, சாமுவேல், 20, ஆகியோர், நாகை மாவட்டம், வேளாங்கண்ணி சர்ச் திருவிழாவை முடித்து, கடந்த 30ம் தேதி சென்னைக்கு, பேருந்தில் திரும்பி கொண்டு இருந்தனர்.
யுவராஜை கொலை செய்ய திட்டம் தீட்டியஅவர்கள், வழியில் திருப்போரூரில் இறங்கினர்.
பின், பணம் கொடுத்து மூன்று கத்திகளை வாங்கிய அவர்கள், நேராக கண்ணகி நகரில் யுவராஜ் வீட்டுக்குள் புகுந்தனர்.
அவர் சுதாரிப்பதற்குள், அவரது தலையில் நான்கு இடங்களில் கத்தியால் வெட்டினர். இதில், பலத்த காயமடைந்த யுவராஜ், ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கண்ணகி நகர் போலீசார், ராஜேஷ், சாமுவேல் ஆகியோரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான இரண்டு பேரை தேடுகின்றனர்.