/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூவருக்கு வெட்டு மர்ம கும்பலுக்கு வலை
/
மூவருக்கு வெட்டு மர்ம கும்பலுக்கு வலை
ADDED : ஏப் 24, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.கே.பி.நகர், சென்னை, வியாசர்பாடி, மூர்த்திங்கர் நகர் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் நந்தா, 17.
இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, தன் வீட்டருகே நின்று மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்த போது, 10 பேர் கொண்ட மர்ம நபர் கும்பல், நந்தாவை கத்தியால் வெட்டியது.
இதை தடுக்கச் சென்ற அவரது தாய்மாமன் மகன் தயாள்ராஜ், பாட்டி மோகனா ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது.
இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து, தப்பிச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

