/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.நகர் பஸ் நிலையம் திரும்பும் பேருந்துகளால் கடும் நெரிசல்
/
தி.நகர் பஸ் நிலையம் திரும்பும் பேருந்துகளால் கடும் நெரிசல்
தி.நகர் பஸ் நிலையம் திரும்பும் பேருந்துகளால் கடும் நெரிசல்
தி.நகர் பஸ் நிலையம் திரும்பும் பேருந்துகளால் கடும் நெரிசல்
ADDED : ஏப் 01, 2024 01:25 AM

தி.நகர்:தி.நகர் பெரியார் சிலை சந்திப்பு அருகே தி.நகர் பேருந்து நிலையத்திற்கு திரும்பும் அரசு பேருந்துகளால் கடும் நெரிசல் நிலவி வருகிறது.
தி.நகர் உஸ்மான் சாலையில், 131 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், தி.நகர் பேருந்து நிலையம் வரை இரும்பு துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பணிகளால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மேட்லி சாலையில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்து வரும் பேருந்துகள், தி.நகர் பெரியார் சிலை சந்திப்பில், பேருந்து நிலையம் செல்ல திரும்புகின்றன.
அப்போது, நிலையத்திற்குள் ஏற்கனவே பேருந்துகள் நிற்பதால், சில சமயம் இப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல், சாலையோரம் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை நிறுத்தப்படுவதால், சாலை குறுகலாகி நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தி.நகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

