/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விதிமுறை மீறும் வாகனங்களால் ராயப்பேட்டையில் விபத்து அபாயம்
/
விதிமுறை மீறும் வாகனங்களால் ராயப்பேட்டையில் விபத்து அபாயம்
விதிமுறை மீறும் வாகனங்களால் ராயப்பேட்டையில் விபத்து அபாயம்
விதிமுறை மீறும் வாகனங்களால் ராயப்பேட்டையில் விபத்து அபாயம்
ADDED : ஆக 09, 2024 12:38 AM

ராயப்பேட்டை, ஒருவழிச்சாலையான திரு.வி.க., சாலையில், எதிர்திசையில் விதிமீறி செல்லும் வாகனங்களால், விபத்து அபாயம் நிலவுகிறது. தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட ராயப்பேட்டையில், திரு.வி.க., சாலை உள்ளது.
அண்ணாசாலை வழியாக சைதாப்பேட்டை, கிண்டி, பல்லாவரம் செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும், இச்சாலை வழியாக தான் செல்லும் என்பதால், எந்நேரமும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும்.
இருப்பினும் கான்ரான் ஸ்மித் சாலை, பீட்டர்ஸ் சாலையிலிருந்து, விதியை மீறி இச்சாலையில், எதிர் திசையில் வாகனங்கள் சென்று வருகின்றன.
இதனால், சாலை விதிகளை பின்பற்றி வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
திரு.வி.க., சாலை - பீட்டர்ஸ் சாலை சந்திப்பில், போக்குவரத்து போலீசார் 'நோ - என்டரி' பதாகைகள் வைத்துள்ளனர். ஆனால், விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து போலீசார் யாரும் பணியமர்த்தப்படுவதில்லை.
இதனால் இச்சாலையில் உள்ள சத்யம் திரையரங்கிற்கு வரும் பெரும்பாலானோர், சாலை விதிகளை மீறியே செல்கின்றனர். உயிரிழப்பு ஏற்படும் முன், சாலை விதிமீறலை தடுக்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.