/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆபத்தான வான்வழி மின்வடங்கள் மத்திய சென்னையில் அவலம்
/
ஆபத்தான வான்வழி மின்வடங்கள் மத்திய சென்னையில் அவலம்
ஆபத்தான வான்வழி மின்வடங்கள் மத்திய சென்னையில் அவலம்
ஆபத்தான வான்வழி மின்வடங்கள் மத்திய சென்னையில் அவலம்
ADDED : ஆக 21, 2024 12:47 AM

வில்லிவாக்கம், அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட வில்லிவாக்கம் பகுதியில், தரை மற்றும் வான் வழியாக வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
குறிப்பாக, 95வது வார்டுக்கு உட்பட்ட கம்பர் காலனியில் உள்ள ஏழு தெருக்களில், சில இடங்களில் தரை வழியாகவும், ஒரு சில தெருக்களில் வான் வழியாகவும் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் திருமங்கலம் சாலை, 1வது லைன் தெருவிலுள்ள வீடுகளுக்கு, மின் கம்பங்களின் வாயிலாக, வான் வழியாக மின் வடங்களில் மின்சாரம் வழங்கப்படுகிறது.
இதில், வான் வழியாக செல்லும் மின் வடங்கள் ஆபத்தான நிலையிலேயே இருப்பதால், பொதுமக்களிடம் அச்சம் நிலவுகிறது. எனவே, பூமிக்குள் வடங்கள் புதைத்து, அதன் வழியே மின் வினியோகம் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
திருமங்கலம் முதலாவது லைன் தெருவில் பல ஆண்டுகளாக, வான் வழியாக மின்சாரம் வழங்கப்படுகிறது.
சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களிலேயே, மின் வினியோகம் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மின்வடத்தில் வழங்கப்படுகிறது.
ஆனால், மத்திய சென்னையில் அமைந்துள்ள வில்லிவாக்கத்தில், இன்னும் பல இடங்களில் பழமையான வான் வழியே தான் மின்சாரம் வழங்கப்படுகிறது.
இப்பகுதிகளில் மண்ணுக்குள் மின் வடங்களை புதைக்க, புதிய சாலை அமைக்கும் போதே குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் ஆபத்தான நிலையிலுள்ள வான்வழி மின்வடங்களை, மண்ணுக்குள் புதைக்க வழி வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.