/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
100 தடங்களில் 350 பஸ் இயக்க முடிவு
/
100 தடங்களில் 350 பஸ் இயக்க முடிவு
ADDED : மே 24, 2024 12:11 AM
சென்னை, கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால், சென்னை புறநகர் பகுதியில் புது வழித்தடங்களில் பேருந்துகள், சிற்றுந்துகள் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர்.
இந்த மனுக்கள் மீது, போக்குவரத்து கழக அதிகாரிகள், ஆறு மாதங்களாக நேரில் ஆய்வு நடத்தி உள்ளனர். அதன்படி, பயணியர் தேவை அதிகமாக உள்ள 100 புதிய வழித்தடங்களை, அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை, புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் அதிகரித்து வருவதால், பேருந்துகளின் தேவை அதிகமாக இருக்கிறது.
ஆவடி, மீஞ்சூர், மாதவரம், செங்குன்றம், வண்டலுார், பெரும்பாக்கம், சோழிங்கநல்லுார், குன்றத்துார், கோவூர், திருப்போரூர், கூடுவாஞ்சேரி, கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில், 100 புதிய வழித்தடங்களை தேர்வு செய்து, பட்டியலை நிர்வாகத்திடம் அளித்துள்ளனர்.
இந்த பட்டியலை வைத்து, அடுத்த இரண்டு மாதங்களில் 352 புதிய பேருந்துகள், புதிய வழித்தடங்களில் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.