/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
68 தெருக்களில் சாலைகளை புதுப்பிக்க முடிவு
/
68 தெருக்களில் சாலைகளை புதுப்பிக்க முடிவு
ADDED : ஆக 19, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழிங்கநல்லுார்:சோழிங்கநல்லுார் மண்டலம், 193, 194 மற்றும் 198 ஆகிய வார்டுகளில், 68 தெருக்களில் சாலை மிகவும் மோசமாக உள்ளன.
குண்டும் குழியுமாக காணப்படும் சாலையால், அடிக்கடி விபத்தும் நடந்துள்ளது. இதனால், சாலையை புதுப்பிக்க மாநகராட்சி முடிவு செய்தது.
இதையடுத்து, 63 தெருக்களில் 7.6 கி.மீ., துாரம் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. அதேபோல், 1.2 கி.மீ., தார் சாலை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக, திட்ட மதிப்பீடு தயாரிக்கும்பணி நடக்கிறது. பருவமழை முடிந்தபின், சாலை புதுப்பிக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

