/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண் குளிப்பதை வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் கைது
/
பெண் குளிப்பதை வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் கைது
ADDED : பிப் 26, 2025 12:37 AM

சென்னை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் ஆன்லைனில் 'ஆர்டர்' செய்த பொருளை கொடுப்பதற்காக, டெலிவரி ஊழியர் வீட்டிற்கு வந்துள்ளார்.
ஆசிரியை பள்ளிக்கு சென்றிருக்கவே, அவரது தாய் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். வீட்டில் அவர் குளித்து கொண்டிருப்பதை அறிந்த டெலிவரி ஊழியர், மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதை பார்த்த ஆசிரியையின் தாய் சத்தம் போட்டுள்ளார். உடனே, டெலிவரி ஊழியர் அங்கிருந்து தப்பினார். நடந்த சம்பவம் குறித்து மகளிடம் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஆசிரியை நாசுக்காக பேசி, டெலிவரி ஊழியரை கிண்டி சிறுவர் பூங்காவிற்கு வரவழைத்துள்ளார். அங்கு தன் கணவருடன் சென்ற ஆசிரியை, அந்த நபரை பிடித்து, கோட்டூர்புரம் போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில், வேளச்சேரியை சேர்ந்த சதீஷ்குமார், 36, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர்.