/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாட்டுமந்தை மேம்பால இறக்கத்தில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
/
மாட்டுமந்தை மேம்பால இறக்கத்தில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
மாட்டுமந்தை மேம்பால இறக்கத்தில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
மாட்டுமந்தை மேம்பால இறக்கத்தில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 01, 2024 01:17 AM
திருவொற்றியூர்:திருவொற்றியூர், ஆர்.கே.நகர் மற்றும் மணலி பகுதிகளை இணைக்கும் வகையில், திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே, மாட்டுமந்தை மேம்பாலம் உள்ளது.
இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்த பின், மூன்று பகுதிகளுக்கான போக்குவரத்து மிக எளிதானது.
அதேவேளையில், மேம்பாலம் இறக்கத்தில் அதிவேகமாக இறங்கும் வாகனங்களால், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன; சிலர் காயமடைவதும் வாடிக்கையாகி விட்டது.
இதில், மணலி வழித்தடத்தில் 'ரெடிமேட்' வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாகனங்கள் மித வேகத்தில் செல்கின்றன.
ஆனால், திருவொற்றியூர் வழித்தட இறக்கத்தில், வேகத்தடையும், சிக்னலும் இல்லாததால், அதிவேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
மேலும், அந்த பகுதி காலடிப்பேட்டை, தேரடி, தெற்கு மாடவீதி இணையும் மும்முனை சந்திப்பாக இருப்பதால், வாகனங்கள் தாறுமாறாக வந்து விபத்தில் சிக்குகின்றன.
மேம்பால இறக்கத்தில் வேகத்தடை அமைக்காவிட்டாலும், இவ்விரு சந்திப்புகளுக்கும் வேகத்தடை அமைத்தால், விபத்து பெருமளவு குறையும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.