/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையோர ஆக்கிரமிப்பு கோவில் மதுரவாயலில் இடித்து அகற்றம்
/
சாலையோர ஆக்கிரமிப்பு கோவில் மதுரவாயலில் இடித்து அகற்றம்
சாலையோர ஆக்கிரமிப்பு கோவில் மதுரவாயலில் இடித்து அகற்றம்
சாலையோர ஆக்கிரமிப்பு கோவில் மதுரவாயலில் இடித்து அகற்றம்
ADDED : ஏப் 23, 2024 12:16 AM

மதுரவாயல், மதுரவாயலில், சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்பு கோவில், போலீஸ் பாதுகாப்புடன்,'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றப்பட்டது.
சென்னை மதுரவாயல், மார்க்கெட் சன்னதி தெருவில் சாலையோரம், சிறிய நாகாத்தம்மன் கோவில் இருந்தது. இந்த கோவில் 50 ஆண்டுகள் பழமையானது.
இந்நிலையில், சாந்தி முனிரத்தினம் என்பவர், தன்னுடைய வீட்டின் முன் கோவில் உள்ளதால், தனக்கு இடையூறாக உள்ளதாகக் கூறி, கடந்த 2019ல், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து, கோவிலை அகற்ற, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கோவிலை அகற்ற, வருவாய் துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், கடந்த மார்ச் 26ம் தேதி, சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
இதற்கு, பொதுமக்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அப்பகுதியில் 'சர்வே' செய்யப்பட்டது. இதில், வழக்கு தொடுத்த சாந்தி முனிரத்தினம் வீட்டின் திண்ணைப் பகுதியும், 4 அடி ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிந்தது.
சர்வே செய்யப்பட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பால், அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
இதையடுத்து, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு கோவில் மற்றும் வழக்கு தொடுத்தவரின் கட்டடத்தின் ஆக்கிரமிப்பு பகுதியும், 'பொக்லைன்' இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்டன.

