/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபாதையை ஆக்கிரமித்த 30 கடைகளின் படிக்கட்டு இடிப்பு
/
நடைபாதையை ஆக்கிரமித்த 30 கடைகளின் படிக்கட்டு இடிப்பு
நடைபாதையை ஆக்கிரமித்த 30 கடைகளின் படிக்கட்டு இடிப்பு
நடைபாதையை ஆக்கிரமித்த 30 கடைகளின் படிக்கட்டு இடிப்பு
ADDED : மார் 02, 2025 12:48 AM

மேற்கு மாம்பலம், மேற்கு மாம்பலம், 134 வது வார்டில், மாம்பலம் ரயில் நிலையம் செல்லும் ஸ்டேஷன் சாலை உள்ளது. தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து, மாம்பலம் ரயில் நிலையம் செல்ல, மாநகராட்சி சார்பில் மேம்பால நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், மேற்கு மாம்பலம் பகுதியில் இருந்து ரயில் நிலையம் செல்லும் ஸ்டேஷன் சாலையில், நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
சாலையோரம் ஆட்டோக்கள், கார்கள், இருசக்கர வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. இதனால், ரயில் நிலையத்திற்கு அவசரமாக செல்லும் பயணியர், நெரிசலில் சிக்கி தவித்தனர்.
இது குறித்து, நம் நாளிதழில் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், கோடம்பாக்கம் மண்டல உதவி கமிஷனர் முருகேசன் மற்றும் செயற்பொறியாளர் பெரியசாமி தலைமையிலான அதிகாரிகள், ஸ்டேஷன் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இதில், பழக்கடை, காய்கறி, இளநீர், சூப் மற்றும் பூ என, 25க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
அத்துடன், நடைபாதையை ஆக்கிரமித்து, 30க்கும் மேற்பட்ட கடைகளுக்கு முன் படிக்கட்டுகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றையும் மாநகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மேற்கு மாம்பலம் ஸ்டேஷன் சாலையில் ஆக்கிரமிப்புகள் குறித்து, தொடர் புகார்கள் குவிந்தன.
இதையடுத்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்காத வண்ணம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்' என்றனர்.