ADDED : ஆக 16, 2024 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
போதைப் பொருள் வழக்குகளில் கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள், செங்கல்பட்டு, தென்மேல்பாக்கத்தில் உள்ள ஜி.ஜே.மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட் என்ற தனியார் நிறுவனம் வாயிலாக அழிக்கப்படுகிறது.
அதேபோல் நேற்று, 70 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 417 கிலோ கஞ்சா, 11 கிராம் மெதாம் பெட்டமைன், நீதிமன்ற உத்தரவுப்படி அழிக்கப்பட்டன.
அழிக்கப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு, 42.4 லட்சம் ரூபாய் என, துணை கமிஷனர் கீதாஞ்சலி தெரிவித்தார்.

