/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் பாயும் கழிவுநீர் வளசரவாக்கத்தில் சீர்கேடு
/
சாலையில் பாயும் கழிவுநீர் வளசரவாக்கத்தில் சீர்கேடு
சாலையில் பாயும் கழிவுநீர் வளசரவாக்கத்தில் சீர்கேடு
சாலையில் பாயும் கழிவுநீர் வளசரவாக்கத்தில் சீர்கேடு
ADDED : ஆக 17, 2024 12:32 AM

வளசரவாக்கம், வளசரவாக்கம் ஸ்ரீ லட்சுமி நகரில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் வழிந்தோடும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வளசரவாக்கம் மண்டலம், 149வது வார்டில், ஸ்ரீ லட்சுமி நகர் முதல் பிரதான சாலை உள்ளது. இது, மதுரவாயல் மற்றும் வளசரவாக்கம் ஆகிய பகுதிகளை இணைக்கும் சாலையாக உள்ளது.
இச்சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் மேல் மூடியில் இருந்து, கழிவுநீர் வழிந்தோடி, சாலையில் தேங்கி வருகிறது.
இதனால், வாகனங்கள் வேகமாக செல்லும் போது, பாதசாரிகள் மீது, கழிவுநீர் தெறிக்கும் நிலை உள்ளது. அதேபோல், ஸ்ரீலட்சுமி நகர் தெருக்களிலும், பாதாள சாக்கடை மூடியில் இருந்து கழிவுநீர் வெளியேறி பாய்கிறது.
எனவே, பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய, குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.