/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேங்கி நிற்கும் கழிவுநீர் நுங்கம்பாக்கத்தில் சீர்கேடு
/
தேங்கி நிற்கும் கழிவுநீர் நுங்கம்பாக்கத்தில் சீர்கேடு
தேங்கி நிற்கும் கழிவுநீர் நுங்கம்பாக்கத்தில் சீர்கேடு
தேங்கி நிற்கும் கழிவுநீர் நுங்கம்பாக்கத்தில் சீர்கேடு
ADDED : ஜூலை 24, 2024 12:29 AM

நுங்கம்பாக்கம்,
நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில், குளம் போல் தேங்கும் கழிவுநீரால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.
தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட நுங்கம்பாக்கத்தில், உத்தமர் காந்தி சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.
இதை சீரமைக்க, குடிநீர் வாரியத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் மட்டுமின்றி, பாதசாரிகளும் வழுக்கி விழுந்து காயமடையும் சூழல் நிலவுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுத்து, தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.