எழும்பூரில் மேம்பாட்டு பணி 9 ரயில்கள் சேவையில் மாற்றம்
எழும்பூரில் மேம்பாட்டு பணி 9 ரயில்கள் சேவையில் மாற்றம்
ADDED : ஜூலை 30, 2026 07:52 PM
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால், ‘உழவன்’ விரைவு ரயில் உட்பட ஒன்பது ரயில்களின் சேவையில் ஆக., 5 முதல் 20ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
ஒரு பகுதி ரத்து ★ தஞ்சாவூர் – எழும்பூர், கர்நாடகா மாநிலம் மங்களூர் – எழும்பூர், கொல்லம் – எழும்பூர், சேலம் – எழும்பூர் ஆகிய விரைவு ரயில்கள் தாம்பரம் வரையிலும், திருச்சி – எழும்பூர் ராக்போர்ட் ரயில் மாம்பலம் வரையிலும் வரும் 5ம் தேதி முதல் 19ம் தேதி வரை இயக்கப்படும்
இடம் மாற்றம் ★ எழும்பூர் – தஞ்சாவூர் உழவன் விரைவு ரயில், எழும்பூர் – மங்களூரு, எழும்பூர் – கேரள மாநிலம் கொல்லம் அனந்தபுரி, எழும்பூர் – திருச்சி ராக்போர்ட் விரைவு ரயில், வரும் 6 முதல் 20ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்
மாற்றுப்பாதை ★ குஜராத் மாநிலம் ஆமதாபாத் காலை 9:30 மணி ரயில், வரும் 6, 13ம் தேதிகளில் திருத்தணி, செங்கல்பட்டு என மாற்றுப்பாதையில் இயக்குவதால், அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் வழியாக செல்லாது
★ திருச்சி – ஆமதாபாத் காலை 5:45 மணி ரயில், வரும் 9, 16ம் தேதிகளில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருத்தணி என மாற்றுப்பாதை வழியாக செல்வதால், எழும்பூர், பெரம்பூர் வழியாக செல்லாது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
