ADDED : பிப் 23, 2025 09:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்டையார்பேட்டை:சென்னை, தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவில் தெருவில், சேனியம்மன் கோவில் உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலை ஒட்டி ஐந்து கடைகளும் உள்ளன.
இந்த கோவிலுக்கு, தினமும் மூன்று மணி நேரம் மட்டுமே மின்சாரம் வினியோகம் நடக்கிறது. மற்ற நேரங்களில் கோவில் இருளிலேயே உள்ளது. ஓராண்டாக இதே நிலை தொடர்வதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
இரவில் இருள் சூழ சாமியை வழிப்படும் நிலையும் ஏற்படுகிறது. சுற்றிலுள்ள கடைகளிலும் மின்சப்ளை வழங்கப்படுவதில்லை. எனவே, கோவிலில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

