/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசார் மனுவுக்கு உடனடி தீர்வு அதிகாரிகளுக்கு டி.ஜி.பி., உத்தரவு
/
போலீசார் மனுவுக்கு உடனடி தீர்வு அதிகாரிகளுக்கு டி.ஜி.பி., உத்தரவு
போலீசார் மனுவுக்கு உடனடி தீர்வு அதிகாரிகளுக்கு டி.ஜி.பி., உத்தரவு
போலீசார் மனுவுக்கு உடனடி தீர்வு அதிகாரிகளுக்கு டி.ஜி.பி., உத்தரவு
ADDED : ஜூன் 09, 2024 01:26 AM

வேப்பேரி:காவலர்கள் குறைதீர்ப்பு முகாமில், தன்னிடம் கொடுக்கப்பட்ட, 248 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு, தமிழக காவல் துறை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காவலர்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது.
இதில், காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் தமிழக காவல் துறை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் குறைகளை கேட்டறிந்து, 248 மனுக்களை பெற்றார். பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் சேமநல நிதியிலிருந்து மருத்துவ உதவித்தொகை கோருதல் உள்ளிட்டவை தொடர்பாக மனுக்கள் அளிக்கப்பட்டன.
பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் அதிகாரிகளுக்கு, தமிழக காவல் துறை டி.ஜி.பி.,சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
முன்னதாக, சிறப்பாக பணிபுரிந்த மூன்று உதவி கமிஷனர்கள், 12 ஆய்வாளர்கள், 18 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 100 போலீசாருக்கு டி.ஜி.பி.,சங்கர் ஜிவால்
வெகுமதி வழங்கி, பாராட்டினார்.
நீதிமன்றத்தில், 1991 - 2019ம் ஆண்டு வரை நிலுவையிலிருந்த, 218 வழக்குகளை விரைந்து முடித்த ஓட்டேரி உதவி ஆய்வாளர் வீராசாமி மற்றும் போலீசார் உட்பட, சிறப்பாக பணிபுரிந்த, 100 போலீசாரை, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பாராட்டி, வெகுமதி வழங்கினார்.
மெரினாவில் ஆயுதங்களுடன் வாகனங்களில் வந்த குற்றவாளிகளை கைது செய்த, சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணியம், முதல்நிலைக் காவலர் பிரவீன்குமார், காவலர்கள் சங்கர், ராம்குமார் ஆகியோருக்கும் வெகுமதி வழங்கப்பட்டது.
கடந்த மூன்று நாளில், 1,016 மனுக்கள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.