/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
யோகா மாஸ்டர் கொலை தாழம்பூர் தம்பதி கைது
/
யோகா மாஸ்டர் கொலை தாழம்பூர் தம்பதி கைது
UPDATED : மார் 22, 2024 12:19 PM
ADDED : மார் 22, 2024 12:19 AM
கானத்துார், கானத்துார், ரெட்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் லோகநாதன், 42; யோகா மாஸ்டர். கடந்த, 13ம் தேதி, இவரை காணவில்லை என, அவரது மகன் அஜய், கானத்துார் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார், அவரது மொபைல் நம்பரை ஆய்வு செய்ததில், கடைசியாக தாழம்பூர், காரணை பகுதியில் உள்ள சுரேஷ், 38, கஸ்துாரி, 35, தம்பதியிடம் பேசியது தெரிந்தது.
அவர்களிடம், தீவிர விசாரித்தபோது, இருவரும் சேர்ந்து, லோகநாதனை கொலை செய்து காரணையில் உள்ள ஒரு கிணற்றில் போட்டது தெரிந்தது. இருவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் கஸ்துாரி, லோகநாதனிடம் யோகா கற்க சென்றுள்ளார். அப்போது லோகநாதன், பாலியல் ரீதியாக அவருக்கு தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் தம்பதி, 13ம் தேதி லோகநாதனை வீட்டுக்கு அழைத்து கொலை செய்து அருகில் உள்ள கிணற்றில் போட்டது தெரிந்தது.

