sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாநில வில் வித்தை போட்டி தயான்சந்த் அகாடமி அபாரம்

/

மாநில வில் வித்தை போட்டி தயான்சந்த் அகாடமி அபாரம்

மாநில வில் வித்தை போட்டி தயான்சந்த் அகாடமி அபாரம்

மாநில வில் வித்தை போட்டி தயான்சந்த் அகாடமி அபாரம்


ADDED : மார் 07, 2025 12:22 AM

Google News

ADDED : மார் 07, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மாநில அளவிலான வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை தயான்சந்த் அகாடமி வீரர் - வீராங்கனையர், பல்வேறு பிரிவுகளில், 13 தங்கம் உட்பட 40 பதக்கங்களை வென்றனர்.

தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில், 18வது மாநில அளவிலான வில்வித்தை போட்டி, தாம்பரம் அருகில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லுாரியில் நடந்தது.

போட்டியில், மாநில முழுதும் இருந்து, 1,000 வீரர் - வீராங்கனையர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.

இதில், இந்தியன் 'போ', இந்தியன் 'ரிகர்வ்' மற்றும் காம்பவுண்டு ஆகிய மூன்று பிரிவுகளில், பல்வேறு வயது வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியில், சென்னையை சேர்ந்த தயான்சந்த் அகாடமி வீரர் - வீராங்கனையர், 13 தங்கம், 15 வெள்ளி, 12 வெண்கலம் என, மொத்தம் 40 பதக்கங்களை வென்று அசத்தினர்.

போட்டியில் பல்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்ற, 40க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர், இம்மாதம் ஆந்திராவில் நடக்க உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us