/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருமங்கலத்தில் பாழாகும் பறிமுதல் வாகனங்கள்
/
திருமங்கலத்தில் பாழாகும் பறிமுதல் வாகனங்கள்
ADDED : ஆக 28, 2024 12:55 AM

திருமங்கலம், வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், திருமங்கலத்தில் பராமரிப்பின்றி, சாலையிலேயே வீணாகி வருகின்றன.
பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படும் போது, அவர்கள் குற்ற சம்பவத்தின் போது பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
நீதிமன்றத்தில் வழக்கு முடிந்த பின், இந்த வாகனங்களின் முறையான ஆவணங்களைக் காண்பித்து, அதன் உரிமையாளர்கள் எடுத்துச் செல்ல முன்வருவதில்லை.
இதுபோன்று, நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான வாகனங்கள் பல ஆண்டுகளாக, திருமங்கலம் காவல் நிலையத்தில் அருகே உள்ள சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை முறையாக அனுமதி பெற்று, ஏலம் விட வேண்டும். ஆனால், அவை ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு கிடப்பதால் மழையிலும், வெயிலிலும், வீணாகி வருகின்றன.
இதனால், லட்சக்கணக்கான மதிப்பிலான வாகனங்கள், மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. சாலையோரத்தில் கேட்பாரற்று கிடப்பதால், உதிரி பாகங்களும் திருடு போக வாய்ப்புள்ளது.
எனவே, வழக்கு முடிந்த பின், உரியவர்களிடம் ஒப்படைக்கவோ அல்லது ஏலம் விடவோ, சம்பந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.