/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவூரில் 'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் அத்தப்பூ கோலமிட்டு நடனமாடிய குடியிருப்புவாசிகள்
/
கோவூரில் 'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் அத்தப்பூ கோலமிட்டு நடனமாடிய குடியிருப்புவாசிகள்
கோவூரில் 'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் அத்தப்பூ கோலமிட்டு நடனமாடிய குடியிருப்புவாசிகள்
கோவூரில் 'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் அத்தப்பூ கோலமிட்டு நடனமாடிய குடியிருப்புவாசிகள்
ADDED : செப் 16, 2024 03:22 AM

குன்றத்துார்:அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளை ஒன்றிணைத்து, 'தினமலர்' நாளிதழ் மற்றும் 'கிரேஸ் சூப்பர் மார்க்கெட்' சார்பில், 'கார்னிவெல் -அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியை, 'சிம்ஸ் மருத்துவமனை, கிட்டீ பட்டீ, தனிஷ்க் ஜுவல்லரி, சாயா பியூட்டி வேர்ல்ட், நிசான் ஆட்டோ ரிலே, மயில் மார்க் ஹோம் கேர் புரோடக்ட்ஸ், பூர்விகா' ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றன.
அந்த வகையில், இந்த வாரம் குன்றத்துார் பிரதான சாலை கோவூரில் உள்ள 'அக் ஷயா ரிப்பப்ளிக் அப்பார்ட்மென்ட்' அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நடந்தது.
இந்த நாளின் மற்றொரு விசேஷம் என்பது ஓணம் பண்டிகையாகும். இதனால், குடியிருப்பே பண்டிகை கோலம் பூண்டது. கேரள மக்களின் பாரம்பரிய உடைகள் அணிந்து, குடியிருப்புவாசிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
முதலில், அத்தப்பூ கோல போட்டி நடந்தது. இதையடுத்து நடன நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து சமையல், உறியடி, மினிமாரதான், பாட்டு, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. சிறுவர்கள் விளையாடுவதற்கு டாய் ரயில், இயந்திர காளை, ஜம்பிங் பலுான், கேலி சித்திரம், ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக பங்கேற்று மகிழ்ந்தனர். அனைத்துவித போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மயில் மார்க் சார்பில் 450 நபர்களுக்கு பூஜை பொருட்கள் அடங்கிய பை பரிசாக வழங்கப்பட்டது.
இயந்தர தனமான இந்த வாழ்க்கையில், பணி நெருக்கடியில் மன இறுக்கத்தில் இருப்போருக்கு, இந்த நிகழ்ச்சி மிக பயனுள்ளதாக உள்ளன. அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும், இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.-
- கே.சுரேஷ், குடியிருப்பு நலச்சங்க செயலர்-
பூக்கோலம், சமையல் போட்டிகளில் பெண்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர். தனித்தனியே வீட்டில் இருந்த நாங்கள், இந்த நிகழ்சியால் ஒன்றாக இணைந்து பேசி மகிழ்ந்த மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.-
- எம்.அன்னபூரணி, அடுக்குமாடி குடியிருப்புவாசி
எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் பொங்கல் விழா காலங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். முதல் முறையாக வெளியே இருந்து வந்து, 'தினமலர்' சார்பில் நடத்திய நிகழ்ச்சி புது அனுபவமாக இருந்தது. இதுபோன்ற நிகழ்சிகளை வரவேற்கிறோம்.-
- எஸ்.சிவனேசன், குடியிருப்பு நலச்சங்க துணை செயலர்