ADDED : ஆக 01, 2024 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பேரி, பணி ஓய்வு பெற்ற 26 போலீசாரின் ஓய்வூதிய பலன்களை விரைந்து வழங்க வேண்டும் என, போலீஸ் கமிஷனர் அருண், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நுண்ணறிவு பிரிவு மூத்த மேலாளர் உட்பட, 26 போலீசாரின் பணி நிறைவு விழா, நேற்று நடந்தது.
தமிழக காவல் துறைக்கும், சென்னை காவல் துறைக்கும், பெருமை சேர்த்ததை நினைவுகூர்ந்து, பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து சான்றிதழ் வழங்கி, கமிஷனர் அருண் பாராட்டினார்.
அப்போது, பணி ஓய்வு பெற்ற காவல் அலுவலர்களுக்கு, ஓய்வூதிய பலன்களை விரைந்து வழங்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரட்கர், இணை கமிஷனர் கயல்விழி, ஓய்வு பெற்றவர்களின் குடும்பத்தினர் என, பலரும் பங்கேற்றனர்.