/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எழும்பூர் நிலையம் மேம்பாடு குறித்து ஆலோனை
/
எழும்பூர் நிலையம் மேம்பாடு குறித்து ஆலோனை
ADDED : ஜூலை 12, 2024 12:31 AM
சென்னை, ரயில்வே வாரியத்தின் உள்கட்டமைப்பு பிரிவு உறுப்பினர் அனில்குமார் கண்டேல்வால், இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு நேற்று முன்தினம் வந்தார்.
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில் ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களின் செயல்பாடு மற்றும் ரயில்களின் இயக்கம் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினார்.
எழும்பூர் ரயில் நிலையத்தின் சீரமைப்பு பணிகள் மற்றும் 'அம்ருத் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்களில் நடைபெறும் மேம்பாட்டு திட்டங்கள், மின்மயமாக்கல் திட்டங்கள், ரயில்வே பாலங்களின் கட்டுமானங்கள், சுரங்கப்பாதை பணிகள், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிகள் ஆகியவை தொடர்பாக அவர் கேட்டறிந்தார்.
பின்னர், அவர்எழும்பூர் - விழுப்புரம் வரை பிரத்யேக ரயிலில் பயணம் செய்து, தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

