/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருநீர்மலை ஏரியில் கலக்கும் கழிவுநீர் - வாரியத்தின் அறிக்கையில் அதிருப்தி
/
திருநீர்மலை ஏரியில் கலக்கும் கழிவுநீர் - வாரியத்தின் அறிக்கையில் அதிருப்தி
திருநீர்மலை ஏரியில் கலக்கும் கழிவுநீர் - வாரியத்தின் அறிக்கையில் அதிருப்தி
திருநீர்மலை ஏரியில் கலக்கும் கழிவுநீர் - வாரியத்தின் அறிக்கையில் அதிருப்தி
ADDED : ஆக 13, 2024 12:15 AM
சென்னை, சென்னையை அடுத்த குரோம்பேட்டை 'மெப்ஸ்' வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவுநீரால், திருநீர்மலை ஏரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது.
'மெப்ஸ்' வளாகத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதி வீட்டு குழாய்களில் நுரையுடன் தண்ணீர் வருகிறது. இதனால், இப்பகுதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, 2023 ஆக., 31ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்து வரும் தீர்ப்பாயம், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுஇருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
மெப்ஸ் வளாக கழிவுநீர் திருநீர்மலை ஏரியில் கலப்பது தொடர்பாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கை திருப்திகரமாக இல்லை.
1மெப்ஸ் வளாகத்தில் உள்ள ஆலைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன?
2கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தேவையான திறன் கொண்டவையா?
3தொழிற்சாலை கழிவுநீர், சாதாரண கழிவுநீர் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது? ஏதேனும் விதிமீறல்கள் உள்ளதா?
4கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லை என்றால் கழிவுகள் எங்கு செல்கிறது? சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்பட்டால் அதன் மீது வாரியம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
5மழைநீர் வடிகாலில் இரண்டு கிராமங்கள் கழிவுநீரை விடுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதா?
6மெப்ஸ் வளாக பகுதியில் நிலத்தடி நீரின் தன்மை, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பிற குறைகள் என்ன?
இந்த விபரங்கள் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 28க்கு ஒத்திவைக்கப்பட்டது.