/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேறும் சகதியுமான சாலை காட்டுப்பாக்கத்தில் அதிருப்தி
/
சேறும் சகதியுமான சாலை காட்டுப்பாக்கத்தில் அதிருப்தி
சேறும் சகதியுமான சாலை காட்டுப்பாக்கத்தில் அதிருப்தி
சேறும் சகதியுமான சாலை காட்டுப்பாக்கத்தில் அதிருப்தி
ADDED : ஜூலை 16, 2024 12:16 AM

பூந்தமல்லி,
காட்டுப்பாக்கத்தில், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாலை சேறும் சகதியுமாக உள்ளதால், பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
பூந்தமல்லி ஒன்றியத்தில், காட்டுப்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. காட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை, ஒரே இடத்தில் அருகருகே அமைந்துள்ளன.
இந்த அலுவலகத்திற்குச் செல்லும் சாலை, மண் சாலையாக உள்ளது. அண்மையில் பெய்த மழைக்கு தண்ணீர் தேங்கி, சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
இதனால், மேற்கண்ட அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், அடிக்கடி வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். எனவே, இந்த பகுதியில் மண் கொட்டி மேடாக்கி, 'பேவர் பிளாக்' சாலை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.