/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நவீன மீன் அங்காடி பணிகள் மந்தமாக நடப்பதால் அதிருப்தி
/
நவீன மீன் அங்காடி பணிகள் மந்தமாக நடப்பதால் அதிருப்தி
நவீன மீன் அங்காடி பணிகள் மந்தமாக நடப்பதால் அதிருப்தி
நவீன மீன் அங்காடி பணிகள் மந்தமாக நடப்பதால் அதிருப்தி
ADDED : ஏப் 29, 2024 01:38 AM

சென்னை:சிந்தாதிரிப்பேட்டையில் நவீன மீன் அங்காடி அமைக்கும் பணிகள், மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, மேற்கு கூவம் சாலை பூங்கா ரயில் நிலையம் அருகே, நவீன மீன் அங்காடி, 2.19 கோடி ரூபாய் செலவில், 1,022 ச.மீ., பரப்பளவில், 102 கடைகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டது.
மேலும், மீன் கழிவுகளை வெளியேற்றும் சுத்திகரிப்பு நிலையம், குப்பையை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள், வழிகாட்டி பலகைகள் மற்றும் வாகன நிறுத்தங்களுடன் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தை, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி துவக்கி வைத்தார். அப்போது, '6 மாத காலத்திற்குள் நவீன மீன் அங்காடி கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என அதிகாரிகள் கூறினர்.
ஆனால், மீன் அங்காடி கட்டுமான பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் முடிந்து, மீன் அங்காடியை பயன்பாட்டிற்கு கொண்டு வர தாமதமாகும் நிலை உள்ளதால், அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

