ADDED : மார் 29, 2024 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம் லோக்சபா தொகுதியில் அமைச்சர் உதயநிதி, திருத்தணி கமலா தியேட்டர் அருகே நேற்று முன்தினம் மாலை திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.
கூட்டத்தை காண்பிக்க, திருத்தணி சட்டசபை தொகுதியில் இருந்து கட்சி நிர்வாகிகள், பேருந்து, வேன், டிராக்டர் மற்றும் ஆட்டோக்கள் வாயிலாக 3,000க்கும் மேற்பட்ட மக்களை வரவழைத்தனர்.
இதில், 80 சதவீதம் பேர் பெண்களை அழைத்து வந்தனர். உதயநிதி பிரசாரம் முடிந்ததும், பெண்களை அழைத்து வந்த கட்சி நிர்வாகிகள், தலைக்கு 300 வீதம் பணம் வழங்கினர். இதற்காக அழைத்து வரப்பட்ட பெண்களிடம் ஏற்கனவே டோக்கன் வழங்கியிருந்தனர்.
அதே நேரத்தில் ஆண்களுக்கு, 200 ரூபாய் வீதம் வினியோகம் செய்யப்பட்டது. சிலருக்கு பணம் கிடைக்காததால் அதிருப்தியடைந்தனர்.
- --நமது நிருபர் -

