/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாவட்ட ஹாக்கி போட்டி இந்தியன் வங்கி தோல்வி
/
மாவட்ட ஹாக்கி போட்டி இந்தியன் வங்கி தோல்வி
ADDED : செப் 02, 2024 01:46 AM
சென்னை:திருவள்ளூர் மாவட்ட ஹாக்கி அமைப்பு சார்பில், மாவட்ட ஹாக்கி ப்ரிமீயர் லீக் போட்டிகள், கடந்த மாதம் துவங்கின.
இதில், தயாந்த் வீரன், இந்தியன் வங்கி, பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ், எஸ்.எம்.நகர், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு உட்பட எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.
வார இறுதி நாட்களில் மட்டுமே போட்டிகள் நடக்கின்றன. அந்த வகையில், சென்னை, போரூரில் உள்ள தனியார் கல்லுாரி மைதானத்தில், நேற்று காலை நடந்த முதல் 'லீக்' போட்டியில், பலம் வாய்ந்த இந்தியன் வங்கி அணியை எதிர்த்து, ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணி களமிறங்கியது.
ஆனால், ஆட்டத்தில் துவக்கம் முதலே ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணியின் பக்கமே பெரும்பாலும் ஆட்டம் இருந்தது.
ஆட்டத்தின் 25வது நிமிடத்தில், அந்த அணி வீரர் கலாநிதி பீல்டு கோல் அடித்து, அந்த அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
தொடர்ந்து, ஆட்டத்தின் 51வது நிமிடத்தில், ஹாக்கி யூனிட் அணி வீரர் பாலசந்தர் ஒரு பீல்டு கோல் அடிக்க, அந்த அணி வலுவான முன்னிலை பெற்றது. இதையடுத்து அந்த அணி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது.
இதனால், ஆட்டத்தின் முடிவு வரையில், இந்தியன் வங்கி அணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க இயலவில்லை.
மற்றொரு லீக் போட்டியில், ஏ.ஜி.க்யூ.ஆர்.சி., அணியினர், 5-2 என்ற கோல் கணக்கில் பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தினர்.