/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' ஸ்டாண்டர்ட் சி.சி., அணி
/
டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' ஸ்டாண்டர்ட் சி.சி., அணி
ADDED : ஜூன் 13, 2024 12:16 AM
சென்னை, திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், பல்வேறு டிவிஷனுக்கான லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. அதன்படி, முதலாவது டிவிஷன் லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஹிந்து கல்லுாரி மற்றும் ஆவடி ஓ.சி.எப்., மைதானங்களில் கடந்த சில மாதங்களாக நடந்தன.
போட்டியில், ஸ்டாண்டர்ட் சி.சி., - அம்பத்துார் சி.சி., பைன் ஸ்டார், கொரட்டூர் சி.சி., உட்பட மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணிகளும், தலா ஏழு போட்டிகள் விதம் மற்ற அணிகளுடன் 'லீக்' முறையில் மோதின.
அனைத்து போட்டிகள் முடிவில், ஸ்டாண்டர்ட் சி.சி., அணி தனது ஏழு போட்டிகளில், ஆறு போட்டிகளில் வெற்றி கண்டு, மொத்தம் 24 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தது.