/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழை, வெள்ள பாதிப்பின்போது துணை நின்றது தி.மு.க., தான்: தமிழச்சி
/
மழை, வெள்ள பாதிப்பின்போது துணை நின்றது தி.மு.க., தான்: தமிழச்சி
மழை, வெள்ள பாதிப்பின்போது துணை நின்றது தி.மு.க., தான்: தமிழச்சி
மழை, வெள்ள பாதிப்பின்போது துணை நின்றது தி.மு.க., தான்: தமிழச்சி
ADDED : மார் 31, 2024 01:55 AM

சென்னை:''வேளச்சேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது, மக்களுடன் துணை நின்று உதவியது தி.மு.க., தான். மத்திய அரசு எந்த உதவியையும் செய்யவில்லை,'' என, தென்சென்னை தி.மு.க., வேட்பாளர் தமிழச்சி பேசினார்.
வேளச்சேரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர், காமராஜர் காலனி, அடையாறு, கஸ்துாரிபாய் நகர், காந்தி நகர், பெரியார் நகர் உள்ளிட்ட இடங்களில், தென் சென்னை லோக்சபா தொகுதியின் தி.மு.க., வேட்பாளர் சுமதி என்ற தமிழச்சி, தேர்தல் பிரசாரத்தில் நேற்று முன்தினம் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
வேளச்சேரி சட்டசபை தொகுதி, தி.மு.க.,வின் கோட்டையாக உள்ளது. கடந்த தேர்தலில், 36,000 ஓட்டுகள் அளித்து, என்னை வெற்றி பெற வைத்தீர்கள்.
நம் ஆட்சிக்கு முன், வேளச்சேரி பகுதி வெள்ளச்சேரியாக இருந்தது. தற்போது மழைநீர் வடிகால் வாரியம் அமைத்து, சிறப்பாக பணியாற்றி வருகிறோம்.
கடந்தாண்டு டிச., மாதம் அதிகளவில் மழை பெய்ததால், பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத அனைத்து பகுதிகளிலும், மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்தது தி.மு.க., அரசு தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பிரதமர் மோடி, தொகுதியைக்கூட வந்து எட்டிப் பார்க்கவில்லை. தேர்தல் என்ற உடனே, நான்கு, ஐந்து முறை தமிழகத்திற்கு வருகிறார். வெள்ளச் சேதம் ஏற்பட்டபோது, தி.மு.க.,வும், தோழமை கட்சியினரும் தான் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். மத்திய குழு ஆய்வு செய்து, வெள்ள சேதத்தை முறையாக கையாண்டதாக தி.மு.க., அரசை பாராட்டி சென்றது.
ஆனால், மாநில அரசு கேட்ட வெள்ள நிவாரண நிதி 38,000 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கவில்லை. தி.மு.க.,வினர் தான் துணை நின்று வெள்ள பாதிப்பில் இருந்து உங்களுக்கு உதவினோம்.
எம்.பி., மேம்பாட்டு நிதியிலிருந்து வேளச்சேரிக்கு 2.020 கோடி ரூபாய் ஒதுக்கி, உள்விளையாட்டரங்கம், பேருந்து நிறுத்தம், அங்கன்வாடி போன்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

