/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.மு.க.,வினர், அதிகாரிகள் தாம்பரத்தில் தள்ளுமுள்ளு
/
தி.மு.க.,வினர், அதிகாரிகள் தாம்பரத்தில் தள்ளுமுள்ளு
தி.மு.க.,வினர், அதிகாரிகள் தாம்பரத்தில் தள்ளுமுள்ளு
தி.மு.க.,வினர், அதிகாரிகள் தாம்பரத்தில் தள்ளுமுள்ளு
ADDED : ஜூலை 12, 2024 12:26 AM
தாம்பரம், தாம்பரம் பேருந்து நிலையத்தில், தினமும் மூச்சு முட்டும் அளவிற்கு நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுப்பது குறித்து, தாம்பரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா, அதிகாரிகளுடன் நேற்று மதியம், பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில், நெடுஞ்சாலை அதிகாரிகள், சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆய்வை முடித்துவிட்டு, எம்.எல்.ஏ., புறப்பட்டு சென்ற பின், அங்கிருந்த நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் வசந்திடம், 'தாம்பரம் - முடிச்சூர் சாலை குண்டும், குழியுமாக படுமோசமான நிலையில் உள்ளது.
'அச்சாலையில், தினமும் நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்படுகின்றனர், விபத்தில் சிக்குகின்றனர்' என, அங்கிருந்த தி.மு.க.,வினர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, அச்சாலையில் காஸ் குழாய் பதிக்கப்படுவதாக, உதவி பொறியாளர் கூறியுள்ளார்.
எரிவாயு குழாய் முக்கியமா, மக்கள் முக்கியமா என, தி.மு.க.,வினர் கேட்டதாகவும், ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
அதற்கு, உதவி பொறியாளர் வசந்தும், தி.மு.க.,வினரை எதிர்த்து, ஒருமையில் பேசியதாககூறப்படுகிறது.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அங்கிருந்த போலீசார் சுதாரித்த, இருதரப்பினரையும் தடுத்து, சமாதானம் செய்து அனுப்பினர்.

