/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடிப்படை பணிகள் விஷயத்தில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
/
அடிப்படை பணிகள் விஷயத்தில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
அடிப்படை பணிகள் விஷயத்தில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
அடிப்படை பணிகள் விஷயத்தில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 17, 2024 01:27 AM
செம்பாக்கம்:தாம்பரம் மாநகராட்சியில், ஐந்து மண்டலங்கள் உள்ளன. இதில், மூன்றாவது மண்டலத்தில், வார்டுகளில் அடிப்படை பணிகள் விஷயத்தில், அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக, தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது:
குப்பை அகற்றும் பணியின் போது, ஒவ்வொரு நாளும், பாதி குடியிருப்புகளில் குப்பையை சேகரிப்பதில்லை. இதனால், ஒவ்வொரு வார்டிலும் குப்பை பிரச்னை தலை விரித்தாடுகிறது.
41வது வார்டில், குடிசை மாற்று குடியிருப்பில், தண்ணீர் ஆதாரமாக இருந்த ஆழ்துளை கிணற்றில் மண் சரிந்து விட்டது. அதை சரிசெய்ய வேண்டும் என்றும், குருசாமி நகரில் கால்வாய் அடைப்பு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், மூன்று மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
குருசாமி நகர், துர்கா காலனி பகுதிகளில் சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், இதுவரை 'டெண்டர்' வைக்கப்படவில்லை.
மணியம்மை தெருவில் கால்வாய் கட்டும் பணிக்கும், பல மாதங்களாக டெண்டர் வைக்கவில்லை. 42வது வார்டில், வேளச்சேரி சாலையில் இருந்து செம்பாக்கம் ஏரியை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட மூடுகால்வாய் பணி, முழுமை பெறாமல் உள்ளது.
இப்படியே தொடர்ந்தால், வரும் மழைக்காலத்தில், இப்பகுதிகளில் வழக்கம் போல் வெள்ளம் தேங்கும். பல கோடி ரூபாய் செலவில் கால்வாய் கட்டியும் பயனில்லாமல் போய்விடும்.
அதேபோல், 44வது வார்டில், ராமகிருஷ்ணாபுரத்தில் தாழ்வான பகுதியில் கால்வாய் முடிவு செய்யப்பட்டு, ஆறு மாதங்கள் ஆகியும் பணிகள் துவங்கப்படவில்லை.
நீர்த்தேக்க தொட்டி கட்ட ஆய்வு செய்யப்பட்டு, பல மாதங்கள் ஆகியும், அத்திட்டம் எந்த நிலையில் உள்ளது என்பது தெரியவில்லை.
இதேபோல், ஒவ்வொரு வார்டிலும் ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன.
அப்படியிருந்தும், அதிகாரிகள் வார்டுகளில் அடிப்படை பணிகள் விஷயத்தில் அலட்சியமாகவே செயல்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.