/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் - திருவண்ணாமலை தினமும் ரயில் இயக்கப்படுமா?
/
தாம்பரம் - திருவண்ணாமலை தினமும் ரயில் இயக்கப்படுமா?
தாம்பரம் - திருவண்ணாமலை தினமும் ரயில் இயக்கப்படுமா?
தாம்பரம் - திருவண்ணாமலை தினமும் ரயில் இயக்கப்படுமா?
ADDED : ஜூன் 29, 2024 12:12 AM
சென்னை, சென்னை, அதன் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தோர், திருவண்ணாமலைக்கு அதிகளவில் செல்கின்றனர். பெரும்பாலானோர் அரசு பேருந்துகளை நம்பியே பயணம் செய்ய வேண்டி உள்ளது.
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு, இரண்டு ரயில் பாதைகள் இருந்தும், போதிய அளவில் ரயில்கள் இயக்குவதில்லை.
பவுர்ணமி கிரிவலத்தின்போது மட்டும், தாம்பரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை, தினமும் இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஏ.பி.ஜி.பி., நுகர்வோர் அமைப்பின் நிர்வாகி சுந்தர் கூறியதாவது:
தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு, 19 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, தினமும் பயணியர் ரயில் இயக்கப்பட்டது. அகலப்பாதை பணியின் காரணமாக நிறுத்தப்பட்ட இந்த ரயில் சேவை, மீண்டும் துவங்கப்படவில்லை.
பயணியர் அதிகமாக இருப்பதால், இந்த ரயிலை தினமும் இயக்க கோரி மனு அளித்துள்ளோம். 45 ரூபாயில் செல்ல முடியும் என்பதால், குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

