ADDED : ஜூன் 06, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, சென்னை ஆவடி, கவரப்பாளையம், சி.டி.எச்., சாலையில், சுற்றித்திரிந்த குதிரை, நேற்று அதிகாலை, குட்டி ஈன்றது. அப்போது, அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்கள், குதிரை குட்டி மீது பாய்ந்து சரமாரியாக கடித்தன. அதைக்கண்ட அப்பகுதியினர், நாய்களை அடித்து விரட்டி, குதிரை குட்டியை மீட்டனர்.
இது குறித்து, ஆவடியில் உள்ள பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பிடம் தெரிவித்தனர்.
அவர்கள், குதிரை மற்றும் குட்டியை, சென்னை அடையாறு, புளூ கிராஸ் சாலையில் உள்ள, கால்நடை முகாமில் சேர்த்தனர்.
அங்கு குதிரை குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.