/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆதிபுரீஸ்வரர் கோவிலில் ஆடை கட்டுப்பாடு
/
ஆதிபுரீஸ்வரர் கோவிலில் ஆடை கட்டுப்பாடு
ADDED : ஆக 17, 2024 12:17 AM

சென்னை,
அறநிலையத்துறை அறிவுறுத்தலின் படி சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள ஹிந்து கோவில்களுக்குள் செல்வோருக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள, 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில், ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்தியது. சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், ஆடை கட்டுப்பாடு குறித்து நுழைவாயில் மற்றும் கொடி மரத்தின் முன்பும் பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவில் நிர்வாகிகளிடம் கேட்ட போது, 'லுங்கி, லெக்கிங்ஸ், டி-சர்ட் போன்ற ஆடைகள் தடை செய்யப்பட்டுள்ளன' என்றார்.

