/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1 லட்சம் ஆப்பிள் பெட்டிகள் திருடிய ஓட்டுனர் கைது
/
ரூ.1 லட்சம் ஆப்பிள் பெட்டிகள் திருடிய ஓட்டுனர் கைது
ரூ.1 லட்சம் ஆப்பிள் பெட்டிகள் திருடிய ஓட்டுனர் கைது
ரூ.1 லட்சம் ஆப்பிள் பெட்டிகள் திருடிய ஓட்டுனர் கைது
ADDED : ஆக 04, 2024 12:30 AM
கோயம்பேடு, கோயம்பேடு சந்தையில் பழக்கடை நடத்தி வருபவர் ராஜேஷ், 40. இவரது கடைக்கு வெளியே, விற்பனைக்காக ஆப்பிள் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு பெட்டியும் 5,000 முதல் 10,000 ரூபாய் மதிப்புடையவை. இவற்றில் சில அவ்வப்போது மாயமாகின.
கடையின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது, மூன்று சக்கர சைக்கிள் வாகனத்தில் வரும் மர்ம நபர், சந்தையில் பணி செய்யும் தொழிலாளி போல், ஆப்பிள் பெட்டிகளை சர்வ சாதாரணமாக திருடி செல்வது தெரிந்தது.
இந்நிலையில், ஆப்பிள் பெட்டிகளை திருடும் நபர், நேற்றும் அந்த கடைக்கு வந்துள்ளார். அப்போது, கடை ஊழியர்களும், உரிமையாளரும் அவரை பிடித்து கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட நபர் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வெங்கடேசன், 33, என்பது தெரியவந்தது.
விசாரணையில் ராஜேஷ் கடை உட்பட பல கடைகளில் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் பெட்டிகளை திருடி, வெளியே குறைந்த விலைக்கு வெங்கடேசன் விற்றதும் தெரிந்தது. கோயம்பேடு போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.